சத்துக்கள் நிறைந்த மொறுமொறு மீன் பால்ஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

0
67
#image_title

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு மீன் பால்ஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

சத்துக்கள் நிறைந்த மீன் பால்ஸ் குழந்தைகளுக்கு எவ்வாறு செய்து கெடுப்பது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக மீன் என்பது உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். மீனில் உடலுக்குத் தேவையான பலச்சத்துக்கள் உள்ளது. மீனை நாம் பொரித்து சாப்பிடலாம். குழம்பு வைத்து சாப்பிடலாம். இன்னும் சிலர் மீனில் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள்.

இந்த மீனை குழந்தைகளுக்கு பிடித்தவாறும் வித்தியாசமான உணவாக தயாரித்து சாப்பிடக் கொடுக்கலாம். அந்த வகையில் குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக மீன் பால்ஸ் செய்து கொடுக்களாம். இந்த மீன் பால்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் இவற்றை செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.

மீன் பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள்…

* மீன்
* வெங்காயம்
* பச்சை மிளகாய்
* கறிவேப்பிலை
* மஞ்சள் தூள்
* சீரகத்தூள்
* கொத்தமல்லி இலைகள்
* முட்டையின் வெள்ளைக்கரு

செய்முறை…

முதலில் மீனை வேக வைத்து அதை எடுத்து ஆற வைக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு இதில் சீரகத்தூள், மஞ்சள் தூள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்றவைத்து அதில் கடாய் வைத்து பின்னர் அதில் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிதளவு எடுத்து உருண்டையாக பிடித்து இதை எண்ணெயில் பொரித்து பொன்னிறமாக எடுத்து பரிமாறலாம். இந்த மீன் பால்ஸ்க்கு கிரீன் சாஸ் அல்லது ரெட் சாஸ் தொட்டு சாப்பிடலாம்.