இந்த ஐந்து நோய் உள்ளதா! கண்டிப்பாக நீங்கள் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும்!!

0
28
#image_title

இந்த ஐந்து நோய் உள்ளதா! கண்டிப்பாக நீங்கள் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும்!!

கத்தரிக்காயை ஒரு சில நோய் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அது என்னென்ன நோய்கள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கத்தரிக்காயில் பல நன்மைகள் உள்ளது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பல உள்ளது. இருப்பினும் இந்த கத்தரிக்காயை ஒரு சிலர் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

கத்தரிக்காயை கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஐந்து வகை நோய்கள்

* வயிற்றில் கற்கள் இருக்கும் நபர்கள் அனைவரும் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கத்தரிக்காயில் ஆக்சலேட் என்ற ஒரு கெமிக்கல் உள்ளது. இந்த கெமிக்கல் நமது உடலுக்குள் உள்ள கற்களை அதிகரிக்கக் கூடும். எனவே வயிற்றில் கற்கள் உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது.

* உடலில் இரத்தப் பற்றாக்குறை இருப்பவர்கள் அனைவரும் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கத்தரிக்காயின் நுகர்வு நமக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை மேலும் அதிகரிக்கும். இதனால் உடலில் இரத்தத்தின் அளவை மேலும் குறைக்கக் கூடும். எனவே உடலில் இரத்தக் குறைபாடு இருப்பவர்கள் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும்.

* அரிப்பு, சொறி போன்ற சருமம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் கத்தரிக்காயை விட்டு தள்ளி இருக்க வேண்டும். ஏனென்றால் கத்தரிக்காயில் உள்ள சில மூலக்கூறுகள் நமது அலர்ஜி தன்மையை அதிகரிக்கும்.

* செரிமான அமைப்பு பலவீனமாக இருக்கும் நபர்கள் மற்றும் அடிக்கடி வயிறு தொந்தரவு உள்ளவர்கள் அனைவரும் கத்தரிக்காயை சாப்பிடக் கூடாது. கத்தரிக்காய் நமக்கு இருக்கும் பிரச்சனையை அதிகரிக்கக் கூடும். இதனால் கத்தரிக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* கண்களில் எதாவது பிரச்சனை இருக்கும் நபர்கள், கண் எரிச்சல் உணர்வு உள்ள நபர்கள் அனைவரும் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.