மூன்று பேர் அடித்த அரைசதம்! முக்கியமான போட்டியில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மத்துல்லா, ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா மூன்று பேரும் அடித்த அரைசதத்தினால் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நேற்று(அக்டோபர்30) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக இலங்கை அணியில் நிசன்கா 46 ரன்களும் குஷால் மெண்டிஸ் 39 ரன்களும், சமரவிக்ரமா 36 ரன்களும் சேர்த்தனர். மேலும் ஆப்கானிஸ்தான் அணியில் ஃபசல்ஹக் பரூக்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் முஜீப் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 242 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடங்கியது வீரர் குர்பாஷ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் தொடக்க வீரர் இப்ரஹிம் ஜட்ரான் உடன் இணைந்து விளையாடிய ரஹ்மத் ஷா ரன்களை சேர்க்கத் தெடங்கினார்.
தொடர்ந்து விளையாடிய தொடக்க வீரர் ஜட்ரான் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய ரஹ்மத் ஷா அரைசதம் அடித்து 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹஸ்மத்துல்லா ஷாகிடி, அஸ்மத்துல்லா ஒமர்சாய் இருவரும் பொறுமையாக விளையாடி ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
ஹஸ்மத்துல்லா ஷாகிடி அரைசதம் அடித்து 58 ரன்களும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் அரைசதம் அடித்து 73 ரன்களும் சேர்க்க ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 242 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3 வது வெற்றியை பதிவு செய்துள்ளது.