தீராத சளித்தொல்லை? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! அடுத்த 5 நிமிடத்தில் மொத்த சளியும் கரைந்து வந்துவிடும்!!
மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக மாறி விடும்.
சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:-
*மூக்கு ஒழுகுதல்
*மூக்கடைப்பு
*மூச்சு விடுதலில் சிரமம்
*தொண்டை வலி
*தொண்டை புண்
*நீஞ்சு அனத்தம்
*தலைவலி
*வறட்டு இருமல்
*உடல் சோர்வு
சளி பாதிப்பு நீங்க வீட்டு வைத்தியம்:-
தேவையான பொருட்கள்:-
*ஓமவல்லி – 3 இலைகள்
*மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
*மிளகு – 10
*இஞ்சி – சிறு துண்டு
*துளசி – 15 இலைகள்
*வெற்றிலை – 1
*தேன் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
அதிக மருத்துவ குணம் கொண்ட ஓமவல்லி இலை 2 எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி கொள்ளவும். அதேபோல் துளசி மற்றும் வெற்றிலை சுத்தம் செய்து கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஓமவல்லி, துளசி, வெற்றிலை, மிளகு, இஞ்சி உள்ளிட்டவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.
பின்னர் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் எடுத்து மிக்ஸி ஜாரில் ஊற்றி அரைத்த விழுதுகளுடன் கலக்கி கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரைத்த விழுதுகள் சேர்த்து அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கும் தருவாயில் அதில் மஞ்சள் தூள் சிட்டிகை அளவு சேர்க்கவும். பின்னர் நன்கு கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைத்து ஒரு தட்டு கொண்டு மூடவும். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து ஒரு டம்ளர் எடுத்து அதனை வடிகட்டி கொள்ளவும். பின்னர் 1/2 ஸ்பூன் தூய தேன் கலந்து இரவில் பருகவும்.