கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வேப்பிலை ஜூஸ் – தயார் செய்வது எப்படி?
அறுசுவைகளில் கசப்பு சுவை உள்ள உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவையாக இருக்கிறது. அந்த வகையில் கசப்பு சத்து நிறைந்த அதிக மருத்துவ குணம் கொண்டவைகளில் ஒன்று வேப்ப இலை. இவை நம் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை குணப்படுத்த சிறந்த தீர்வாக இருக்கிறது. வேப்ப இலை மட்டும் அல்ல வேப்ப மரத்தின் காய், வேர், தண்டு, பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த வேப்பிலை நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. கல்லீரல் தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
இந்த கல்லீரலில் நச்சுக்கள் தேங்கி கிடந்தால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். இந்த கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*வேப்பிலை – 1/2 கைப்பிடி அளவு
*தண்ணீர் – 1 டம்ளர்
வேப்பிலை ஜூஸ் தயார் செய்வது எப்படி?
முதலில் 1 கைப்பிடி அளவு வேப்பிலையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் இதை 1 மிக்ஸி ஜாரில் போட்டு 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும்.
குறிப்பு:-
*இதை காலையில் வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும்.
*வேப்பிலை கசப்புத் தன்மை கொண்டவை என்பதினால் அதில் இனிப்பு கலந்து பருகக் கூடாது.