வீட்டு துணி அறையில் “நாப்தலின்” உருண்டைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0
193
#image_title

வீட்டு துணி அறையில் “நாப்தலின்” உருண்டைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நம்மில் பலர் வீடுகளில் பாச்சை பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும். முக்கியமாக துணி அறை (பீரோ), சமையலறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் தான் இவை அதிகம் காணப்படும். துணி அறையில் பதுங்கி நல்ல துணிகளை கடித்து ஓட்டைகளை உருவாக்குவதோடு பாச்சை பூச்சி நம் துணிகளின் மேல் நடமாடுவதால் ஒருவித நாற்றத்தை நம் துணி பெற்றுவிடுகிறது. இதை தவிர்க்க நாம் நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துகிறோம்.

இந்த நாப்தலின் பாலை அந்துருண்டை, பாச்சை உருண்டை, பூச்சி உருண்டை என பல பெயர்களில் அழைக்கின்றோம். இந்த நாப்தலின் உருண்டைகளில் இருந்து வரும் ஒருவித வாசனை பூச்சிகளை விரட்டும் தன்மையை கொண்டிருக்கிறது. இதனால் இவை கழிவறை, சமையலறை சிங்க், பீரோ உள்ளிட்ட இடங்களில் வைக்கப்படுகிறது.

இந்த நாப்தலின் உருண்டைகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

நிலக்கரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டும் பொருள் ஆகும். பின்னர் இதனுடன் நறுமணம் தரும் பொருட்களை பயன்படுத்தி நாப்தலின் உருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. இந்த உருண்டைகளில் இருந்து வரும் வாயுவானது பூச்சிகளை உடனடியாக கொன்று அதன் தொல்லையில் இருந்து விடுபட வைப்பதினால் இதை மக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதில் ஒளிந்துள்ள ஆபத்து குறித்து தெரிந்தால் உண்மையால் ஷாக் ஆகிடுவீங்க மக்களே.

நம் வீட்டில் தொடர்ந்து நாப்தலின் பயன்படுத்தி வந்தோம் என்றால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

நாம்தலின் உருண்டைகளால் ஏற்படும் பாதிப்பு:-

*தலை சுற்றல்

*அலர்ஜி

*வாந்தி

*மயக்கம்

*ஆஸ்துமா

*சைனஸ்

*ரத்த சோகை

*இரத்த புற்று நோய்

*இரத்த அணுக்கள் பாதிப்பு

இந்த நாப்தலின் பால் கலந்த காற்றை சுவாசிப்பது என்பது .002 மில்லி கிராம் நாப்தலினை உண்பதற்கு சமம் என்று ஆராய்ச்சியின் மூலம் வெளிவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நோயான இரத்த புற்று நோயை உணடாக்கும் அபாயத்தை கொண்டிருப்பதால் இந்த நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. முக்கியமாக குழந்தைகளின் துணிகளுக்கு இதை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.