மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்.. “பச்சை நிற ஆவின் பால்” பாக்கெட் விற்பனை இன்னும் 3 நாட்களில் நிறுத்தப்படும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!!

0
45
#image_title

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்.. “பச்சை நிற ஆவின் பால்” பாக்கெட் விற்பனை இன்னும் 3 நாட்களில் நிறுத்தப்படும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!!

தமிழக அரசு ஆவின் பால் நிறுவனத்தை கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கி மக்களுக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தினமும் 37 லட்சம் லிட்டர் பாலை மாட்டு பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து பாலின் தரத்தை பிரித்து பாக்கெட் செய்து விலை நிர்ணயித்து விற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விற்பனை விலையை ஒப்பிடுகையில் ஆவின் நிறுவனம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதால் மக்கள் மத்தியில் ஆவினுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

நீலம், பச்சை, ஆரஞ்சு, பிங்க் என்று 4 நிறங்களில் ஆவின் நிறுவனம் மாதாந்திர பால் அட்டை மூலம் 5 லட்சம் பேருக்கு பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. நீலம், பச்சை உள்ளிட்ட நிறங்களை கொண்ட பால் பாக்கெட்டுகள் மக்கள் பயன்பாட்டில் அதிகம் காணப்படுகிறது.

இதில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை நிற பாக்கெட் விற்பனையை வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பால் பாக்கெட்டிற்கு பதிலாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் என்ற பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

பச்சை நிற பால் பாக்கெட்டின் கொழுப்புச் சத்து அளவை 4.5% ஆக உயர்த்த தினமும் ரூ.840 கோடி ரூபாய் செலவாகிறது. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் இதற்கு மாற்றாக தான் 3.5% கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் பாலை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆவின் நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கொழுப்புச் சத்து குறைவான டிலைட் பாலால் உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்து குறைவாக இருக்கும் என்றும் இந்த 3.5% கொழுப்புசத்து கொண்ட டிலைட் பாலுக்கு 4.5% கொழுப்புசத்து கொண்ட பச்சை நிற பால் பாக்கெட் விலையையே நிர்ணயம் செய்து விற்பது என்பது மறைமுகமாக விலை உயர்வை காட்டுகிறது என்று பொதுமக்களின் கருத்தாக உள்ளது.