உடல் எடை அதிகரிக்க இதை 1 கிளாஸ் பருகி வாருங்கள்..!! 30 நாளில் 5 கிலோ எடை கன்பார்ம்..!!

0
80
#image_title

உடல் எடை அதிகரிக்க இதை 1 கிளாஸ் பருகி வாருங்கள்..!! 30 நாளில் 5 கிலோ எடை கன்பார்ம்..!!

ஒரு சிலருக்கு என்ன தான் நன்றாக சாப்பிட்டாலும் அவர்களின் உடல் எடை கூடவே கூடாது. அவர்களும் உடல் எடையை அதிகரிக்க பல முயற்சிகளை செய்திருப்பார்கள். ஆனால் அதனால் எந்த ஒரு பயனும் இல்லாமல் தான் போயிருக்கும்.

இந்நிலையில் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றினாலே போதுமானது. இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

*உலர் அத்தி

*பேரிச்சை

*பாதாம்

*முந்திரி ‘

*வேர்க்கடலை

*கருப்பு கொண்டக்கடலை

*பச்சை பயிறு

*வாழைப்பழம்

*பால்

செய்முறை…

முதலில் ஒரு கிண்ணத்தில் 4 உலர் அத்தி, 4 பேரிச்சை, 6 பாதம் பருப்பு, 10 முந்திரி, 20 கிராம் வேர்க்கடலை, 40 கிராம் கருப்பு கொண்டைக் கடலை மற்றும் 20 கிராம் பச்சை பயறு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.

மறுநாள் காலையில் 1 கிளாஸ் பாலை மிக்ஸி ஜாரில் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் தோல் நீக்கிய 2 வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து அரைக்கவும். அடுத்து ஊற வைத்துள்ள பருப்பு கலவையை அதில் சேர்த்து நன்கு அரைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர ஒரே மாதத்தில் உடல் எடை அதிகரிக்கும்.