ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பை குணப்படுத்த இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

0
61
#image_title

ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பை குணப்படுத்த இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உணவு அவசியம் ஆகும். ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே நம்மில் பலர் மறந்து விட்டோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

வயிற்றுப் புண் ஏற்படக் காரணம்:-

*ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம்

*உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமை

வயிற்றுப் புண் அறிகுறி:-

*அடிவயிற்று வலி

*குமட்டல்

*வயிறு உப்பசம்

*கருப்பு நிற மலம்

*திடீர் எடை குறைவு

*புளித்த ஏப்பம்

இந்த வயிற்றுப் புண் பாதிப்பை சரி செய்ய மணத்தக்காளி காயில் குழம்பு செய்து சாப்பிட்டு வரலாம்.

மணத்தக்காளி காயின் பயன்கள்:-

*இந்த காயில் அதிகளவு வைட்டமின் இ, டி, நீர்ச்சத்து, தாது உப்பு, புரோட்டின் உள்ளிட்டவை நிறைந்து இருக்கிறது

*வயிற்று போக்கு, வயிற்றுப் புண், குடல் புண், வயிறு எரிச்சல், அல்சர், குடற் புழு உள்ளிட்ட வயிறு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு இந்த காய் சிறந்த தீர்வாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:-

*மணத்தக்காளி காய் – 1/4 கப்

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*சின்ன வெங்காயம் – 10

*தக்காளி – 2

*புளி – எலுமிச்சை அளவு

*மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி

*கொத்தமல்லித் தூள் – 2 தேக்கரண்டி

*வர மிளகாய் – 2

*உப்பு – தேவையான அளவு

செய்முறை..

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

அடுத்து எடுத்து வைத்துள்ள மணத்தக்காளி காம்புகளை நீக்கி அதனை சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும். அடுத்து தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியவுடன் மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் மணத்தக்காளி காய் குழம்பு தயார்.

இதை வாரத்தில் 2 முறை சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றுப் புண் பாதிப்பு முழுமையாக குணமாகும்.