வண்டு கடியை குணமாக்கும் சுலபமான வீட்டு வைத்தியம் இதோ..!!
மழை காலமோ, வெயில் காலமோ வீட்டில் பூச்சி இல்லாத நாள் கிடையாது. இந்த வண்டு பூச்சிகளில் விஷம் கொண்ட பூச்சி, விஷம் அற்ற பூச்சி என இரு வகைகள் இருக்கின்றது. இதில் எது விஷப் பூச்சி என்று நமக்கு தெரியாது. எந்த பூச்சி கடித்தாலும் உடல் உபாதைகள் ஏற்பட தொடங்கினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்த ஒன்றாக இருக்கும்.
இல்லையெனில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வண்டு மற்றும் பூச்சி கடியை குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
தீர்வு 01:
ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும். இதை வண்டு, பூச்சி கடித்த இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும்.
தீர்வு 02:
தேவையான அளவு தேன் எடுத்து வண்டு, பூச்சி கடித்த இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும்.
தீர்வு 03:
கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து வண்டு, பூச்சி கடித்த இடத்தில் தடவினால் அதன் வீரியம் குறையும்.
தீர்வு 04:
சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் துளசி சாற்றை வண்டு மற்றும் பூச்சி கடித்த இடத்தில் தடவினால் அதன் பாதிப்பு குறையும்.
தீர்வு 05:
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இதை பூச்சி கடித்த இடத்தில் தடவினால் அதன் பாதிப்பு முழுமையாக நீங்கும்.
தீர்வு 06:
பூண்டு பல்லை தோல் நீக்கி நறுக்கி பூச்சி, வண்டு கடித்த இடத்தில் தடவினால் அதன் பாதிப்பு முழுமையாக நீங்கும்.