காது இரைச்சல் குணமாக நல்லெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து காதில் விடுங்கள்..!!

0
150
#image_title

காது இரைச்சல் குணமாக நல்லெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து காதில் விடுங்கள்..!!

நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்று காது. இதை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். காதுகள் சரியாக கேட்க வேண்டுமென்றால் செவிப்பறை சீராக இருக்க வேண்டும். ஆனால் அதிகப்படியான ஒலி உள்ளிட்டவைகளால் காது இரைச்சல் ஏற்படுகிறது. காதுக்குள் தண்ணீர் புகுந்தாலும் காது வலி, இரைச்சல் பாதிப்பு ஏற்படும். இதை இயற்கை வழிகளில் சரி செய்ய முயலுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*சுக்கு

*மிளகு

*திப்பிலி

*இலவங்கப் பட்டை

*சதகுப்பை

*காயம்

*அதிவிடயம்

செய்முறை…

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சம அளவு எடுத்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் அதில் எடுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து சிறிது ஆற விடவும்.

சூடு பொறுக்கும் அளவிற்கு வந்ததும் அதை காதில் சில துளிகள் விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் காது இரைச்சல் குணமாகும்.