உடலில் தேங்கி கிடக்கும் வாயுக்கள் வெளியேற சிம்பிள் வழிகள் இதோ!

0
273
#image_title

உடலில் தேங்கி கிடக்கும் வாயுக்கள் வெளியேற சிம்பிள் வழிகள் இதோ!

1)சிறிதளவு சோம்பு, கொத்தமல்லி மட்டும் சிட்டிகை அளவு மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் அளவு நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வாயுத் தொல்லை நீங்கும்.

2)ஒரு கிளாஸ் அளவு சூடு நீரில் 1/2 ஸ்பூன் பெருங்காயத் தூள் கலந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் வெளியேறி விடும்.

3)ஓமத்தை வறுத்து பொடியாக்கி தினமும் காலை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

4)அருகம்புல்லை உலர்த்தி பொடியாக்கி 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து காலை நேரத்தில் குடித்து வந்தால் வாயுக்கள் அகலும்.

5)சீரகம் மற்றும் ஓமத்தை வறுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

6)ஒரு கிளாஸ் வெந்நீரில் 1/4 ஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து அருந்தினால் வாயுத்தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

7)வெந்தயம், சீரகம், ஓமம் சம அளவு எடுத்து அரைத்து 1 கிளாஸ் அளவு நீரில் 1 ஸ்பூன் அளவு போட்டு காய்ச்சி குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

8)ஒரு கிளாஸ் அளவு நீரில் 1 துண்டு இடித்த இஞ்சி மற்றும் 1 பல் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வாயுத் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

Previous articleபைல்ஸ் 1 நாளில் குணமாக இந்த மூலிகை வைத்தியம் தான் பெஸ்ட்!
Next articleகொழுப்பு கட்டி ஒரே நாளில் கரைய இந்த இலையை மட்டும் பயன்படுத்துங்கள்!