குழந்தையின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் சத்து கஞ்சி..!
குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க கெமிக்கல் கலந்த பொருட்களை சாப்பிட கொடுப்பதை முற்றிலும் தவிர்க்கவும்.
வீட்டு முறையில் செய்த சத்து பவுடரை வைத்து கஞ்சி காய்ச்சி கொடுக்கவும்.
*வேர்க்கடலை
*பாதாம்
*முந்திரி
*சிவப்பு அவல்
*பொட்டுக் கடலை
*ஏலக்காய்
*பால்
*நாட்டு சர்க்கரை
இந்த பொருட்களை கொண்டு சத்து பவுடர் மற்றும் கஞ்சி காய்ச்சி கஞ்சி காய்ச்சும் முறையை அறிவோம்…
சத்து பவுடர் செய்வது எப்படி?
முதலில் 1 கப் முந்திரி மற்றும் 1 கப் அவலை சிறிது நெயில் வறுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வறுத்த வேர்க்கடலையை இதற்கு பயன்படுத்த வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி, சிவப்பு அவல், 1/4 கப் பொட்டுக் கடலை, 1 கப் வேர்க்கடலை, 2 ஏலக்காய், 1/4 கப் பாதாம் சேர்த்து அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
இதை ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளவும்.
கஞ்சி காய்ச்சுவது எப்படி?
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு அரைத்த சத்து பவுடரை சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் சிறிது பால் சேர்த்து கட்டி படாமல் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் பால் சேர்த்து கரைத்த பவுடரை சேர்த்து கைவிடாமல் கஞ்சி காய்ச்சிக் கொள்ளவும்.
பிறகு சுவைக்காக சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து ஆறவிட்டு குழந்தைகளுக்கு ஊட்டவும். இந்த கஞ்சியை பெரியவர்களும் சாப்பிடலாம்.
இந்த கஞ்சி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்கக் கூடியது.