முகத்தை நட்சத்திரம் போல் ஜொலிக்க செய்யும் “ரோஸ் க்ரீம்” – தயார் செய்வது எப்படி?

0
178
#image_title

முகத்தை நட்சத்திரம் போல் ஜொலிக்க செய்யும் “ரோஸ் க்ரீம்” – தயார் செய்வது எப்படி?

முகத்தை அழகாக வைக்க செயற்கை க்ரீம்களை பயன்படுத்தாமல் பன்னீர் ரோஜாவில் க்ரீம் செய்து உபயோகிக்கவும். இந்த க்ரீம் முகத்திற்கு ஒரு பொலிவை கொடுப்பதோடு கருமை, கரும் புள்ளிகளை மறைய வைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்…

1.பன்னீர் ரோஜா இதழ்
2.கற்றாழை ஜெல்
3.அரிசி மாவு
4.தேங்காய் எண்ணெய்
5.சந்தனம்

செய்முறை:-

ஒரு கப் பன்னீர் ரோஜா இதழை 1 1/2 கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.

அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். மீண்டும் ஒரு கிண்ணம் எடுத்து 2 தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி சந்தனம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல் சேர்க்கவும். அதனுடன் 1 அல்லது 1 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

இறுதியாக தயார் செய்து வைத்துள்ள பன்னீர் ரோஜா தண்ணீரை அதில் ஊற்றி நன்கு குழைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

இதை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முக கருமை நீங்கி முகம் பொலிவுபெறும்.

Previous article80 வயதில் 20 வயது இளமை கிடைக்க ‘பப்பாளி’ ஒன்று போதும்!
Next articleKerala Recipe: கேரளா ஸ்டைல் வெஜ் தேங்காய் பால் ரெசிபி!!