ஒரு ஸ்பூன் அரிசியை இப்படி பயன்படுத்தினால் இனி முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை ஏற்படாது!!

Photo of author

By Divya

ஒரு ஸ்பூன் அரிசியை இப்படி பயன்படுத்தினால் இனி முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை ஏற்படாது!!

Divya

ஒரு ஸ்பூன் அரிசியை இப்படி பயன்படுத்தினால் இனி முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை ஏற்படாது!!

பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மலச்சிக்கல் பாதிப்பால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மலம் வறண்டு போகும்.இதனால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.மலம் கழிக்காமல் குடலிலேயே தேங்கி போனால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுமையாக கெடுத்து விடும்.

இந்த மலச்சிக்கலுக்கு இயற்கை வழியில் பல வைத்தியங்கள் உள்ளது.அதில் ஒன்று தான் காட்டு யானம் அரிசி வைத்தியம்.

காட்டு யானம் அரிசி

இவை இந்தியாவின் பாரம்பரிய அரிசி வகை ஆகும்.இந்த காட்டு யானம் அரிசியில் புரதம்,கொழுப்பு,சோடியம்,பொட்டாசியம்,வைட்டமின்கள் நிறைந்து இருக்கிறது.இவை நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை தருகிறது.

காட்டு யானம் அரிசியை வேக வைத்தால் அவை ஒட்டாமல் தனி தனியாக பிரிந்து வரும்.அதுமட்டும் இன்றி வெந்து வர நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.

இந்த காட்டு யானம் அரிசி சிறிதளவு எடுத்து நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு இதை நன்கு வேக வைத்து உப்பு சேர்த்து இளஞ்சூட்டில் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக நீங்கும்.