உங்கள் பற்கள் வெண்மையாக வலிமையாக இருக்க இந்த பல்பொடியை யூஸ் பண்ணுங்கள்!!
ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பல் சொத்தை,வாய் துர்நாற்றம்,ஈறுகளில் வீக்கம்,பல் பலவீனம் ஆகுதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.எனவே பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பொடி செய்து பற்களை துலக்கி வாருங்கள்.
இளம் வயதில் இருந்தே டூத் பேஸ்ட்டிற்கு பதில் இந்த மூலிகை பொடியை வைத்து பற்களை துலக்கி வந்தால் முதுமை காலத்தில் பற்கள் வலிமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)கடுக்காய்
2)நெல்லிக்காய் வற்றல்
3)இலவங்கம்
4)இந்துப்பு
5)ஏலக்காய்
6)மிளகு
7)பட்டை
8)வேப்பிலை
செய்முறை:-
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் கடுக்காய்,நெல்லிக்காய் வற்றல்,வேப்பிலை 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும்.இலவங்கம்,ஏலக்காய்,மிளகு,பட்டை 25 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும்.இந்துப்பை 10 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள் அனைத்தையும் வெயிலில் போட்டு நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
இதை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இந்த பொடியை பயன்படுத்தி பற்களை துலக்கி வந்தால் பல் சொத்தை,ஈறு வீக்கம்,வாய் துர்நற்றம் ஆகியவை குணமாகும்.