விழுந்து முளைத்த பற்கள் மீண்டும் ஆட்டம் காண்கிறதா? இதை ரொம்ப சுலபமான முறையில் சரி செய்யலாம்!!
சிறுவயதில் நம் அனைவருக்கும் பற்கள் விழுந்து புதிதாக முளைப்பது இயல்பான ஒன்று தான்.பற்கள் ஒருமுறை மட்டுமே விழுந்து முளைக்க கூடியவை.இதனால் பற்களை அதிக கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும்.
தினமும் இருமுறை பற்களை துலக்க வேண்டும்.உணவு உட்கொண்ட பின்னர் வாயை கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும்.ஆனால் இதை பலர் செய்வது இல்லை.இதனால் பல் சொத்தை,ஈறுகளில் வலி,வீக்கம் ஏற்படுதல்,பல் ஆடுதல் போன்ற பிரசச்னைகள் ஏற்படும்.
வயதான பின்னர் பற்களை ஆடினால் கூட பரவாயில்லை.ஆனால் இளம் வயதில் பல் ஆட்டம் கண்டால் அதை கவனித்து சரி செய்து கொள்வது அவசியம்.பொதுவாக பற்கள் ஆடும் பொழுது உணவுகளை சாப்பிடுவது என்பது கடினமாக ஒன்றாக இருக்கும்.
பற்கள் ஆட்டம் காண்பதை உணர்ந்து விட்டால் தாமதம் செய்யாமல் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்கள்.நிச்சயம் பல் ஆடல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
பற்கள் வலுவிழந்து ஆடுவதற்கான காரணங்கள்:-
1)சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ளுதல்
2)ஈறுகளில் பிரச்சனை
3)பற்களில் காயங்கள் ஏற்படுவது
4)சொத்தை பற்கள்
பல் ஆடல் பிரச்னையை எவ்வாறு சரி செய்வது?
*நல்லெண்ணெயை பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்து வந்தால் தளர்வான பற்கள் வலிமையாகும்.
*தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்து வந்தால் பற்கள் வலிமையாகும்.
*பெரு நெல்லிக்காயை பொடி செய்து பற்களை துலக்கி வந்தால் ஆடும் பற்கள் வலிமையாகும்.
*பூண்டை இடித்து ஆடும் பற்களை மீது பேஸ்ட் போல் தடவினால் வலுவிழந்த பற்கள் வலிமை பெறும்.
*கல் உப்பை நீரில் கரைத்து பற்களை சுத்தம் செய்து வந்தால் பல் இடுக்குகளில் தேங்கி இருக்கும் பாக்டீரியாக்கள்,கிருமிகள் அனைத்தும் அழிந்து போகும்.
*தேங்காய் எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து கலக்கி பற்களை தேய்ப்பதன் மூலம் ஆடுகின்ற பற்களை வலிமையாக்கலாம்.
*மஞ்சள் மற்றும் மிளகை இடித்து பேஸ்ட்டில் கலந்து பற்களை துலக்கி வருவதன் மூலம் பல் ஆடல் பிரச்சனையை சரி செய்து கொள்ள முடியும்.