இனி டிராவல், டூரிசம் மற்றும் ஹாஸ்பிடல் என அனைத்திலும் ஆதார் கார்டு!! புதிய ஆதார் சட்ட திருத்தம் 2025!!

Photo of author

By Gayathri

அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஆதார் கார்டு ஆனது தற்பொழுது தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆதார் திருத்த விதிகளை மோடி அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஆதார் திருத்த விதிகள் 2016 ன் படி, மத்திய மற்றும் மாநில அரசினுடைய சலுகைகளை பெறுவதற்கும் அடையாளம் சரி பார்ப்பதற்கும் நிதி சேவைகளை பெறுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த ஆதார் கார்டு ஆனது தற்பொழுது தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆதார் திருத்த விதிகள் 2025 :-

தனியார் நிறுவனங்கள் ஆதார் கார்டினை பொது நலம் சார்ந்த சேவைகளான இ-காமர்ஸ், டிராவல், டூரிசம் மற்றும் ஹெல்த் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி போன்றவற்றிற்கு ஆதார் கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ஆனால் இதனை பெறுவதற்கு தனியார் நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசினுடைய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிந்த அதன்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சரி பார்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின், இந்த ஆணையம் ஆனது சரியாக இருக்கக்கூடிய விண்ணப்பங்களை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். அதன் பிறகு தான் தனியாருக்கு ஆதார் கார்டு பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அங்கீகாரமானது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.