Wheezing & Sainas: அதிகப்படியான சளியால் சைன்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் நுரையீரல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது வீசிங் பாதிப்பு ஏற்படுகிறது.தற்பொழுது இந்த இரண்டு பாதிப்புகளும் மக்களை வாட்டி எடுத்து வருகிறது.இந்த பாதிப்புகளை இயற்கை பானம் மூலம் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.
வீசிங் அறிகுறிகள்:
*மூச்சுத்திணறல்
*காய்ச்சல்
*நெஞ்செரிச்சல்
*இருமல்
*முக வீக்கம்
*நாக்கு வீக்கம்
*தொண்டை புண்
சைனஸ் அறிகுறிகள்:
*அதிகப்படியான கெட்டி சளி
*காய்ச்சல்
*தலைவலி
*உடல் சோர்வு
*மூச்சு எரிச்சல்
*முக வீக்கம்
சைன்ஸ் மற்றும் வீசிங் பாதிப்பிற்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி இதோ:
தேவையான பொருட்கள்:-
1)கிராம்பு – நான்கு
2)கருப்பு மிளகு – நான்கு
3)ஓமவல்லி தழை – நான்கு
4)துளசி இலை – பத்து
5)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
படி 01:
நீங்கள் கிராம்பு,கருப்பு மிளகு,துளசி,ஓமவல்லி இலை ஆகிய பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.
படி 02:
பிறகு கருப்பு மிளகு மற்றும் இலவங்கத்தை(கிராம்பு) கல்வத்தில் போட்டு பொடி பக்குவம் வரும் வரை இடித்துக் கொள்ளுங்கள்.
படி 03:
அதன் பிறகு நான்கு ஓமவல்லி இலையை பறித்து தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து இதை கத்தி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
படி 04:
அடுத்த பத்து துளசி இலையை தண்ணீர் போட்டு அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இவற்றை கொண்டு அற்புத கஷாயம் தயாரிக்க வேண்டும்.
படி 05:
அதற்கு முதலில் ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
படி 06:
அடுத்ததாக இடித்த இலவங்கம் மற்றும் கருப்பு மிளகுத் தூளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
படி 07:
அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலை மற்றும் துளசி இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
படி 08:
அதன் பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
படி 09:
அடுத்து ஒரு தேக்கரண்டி தூயத் தேனை இந்த பானத்தில் ஊற்றி மிக்ஸ் செய்து பருகினால் வீசிங்,சைன்ஸ் பாதிப்பு குணமாகும்.அதேபோல் அடிக்கடி சூடான நீர் பருக வேண்டும்.