வெயில் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த ஜூஸ் செய்து குடித்து வாருங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)சீரகம் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
நீங்கள் முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.நெல்லி விதையை மட்டும் அப்புறப்படுத்திவிடுங்கள்.அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை அதில் போட்டு கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அரை தேக்கரண்டி சீரகத்தை அதில் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்தால் உடல் சூடு தணியும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.இந்த ஜூஸை குடித்தால் உடல் சூடு தணிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளரிக்காய் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
நீங்கள் ஒரு முழு வெள்ளரிக்காயை எடுத்துக்க கொள்ளுங்கள்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வெள்ளரி துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த வெள்ளரி ஜூஸை குடித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)நெல்லிக்காய் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முழு நெல்லிக்காய் எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து தேன் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.