
அ.தி.மு.க பல ஆண்டுகளாக தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் விளங்கும் அரசியல் கட்சியாகும்.பலமுறை தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், தேர்தலில் தோற்றாலும் சிறந்த எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது அதன் செல்வாக்கு குறைந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவிற்க்கு பிறகு அ.தி.மு.க பல்வேறு உட்கட்சி பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் த.வெ.க விற்கும், தி.மு.க விற்கும் தான் நேரடி போட்டி என்றும், தனது பிரதான அரசியல் எதிரி தி.மு.க தான், என்றும் சமீபத்தில் த.வெ.க தலைவர் கூறியிருந்தார்.
இது குறித்து அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-யிடம் செய்தியாளர் கேள்வியெழுப்பிய போது, தமிழகத்தில் ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய திராவிட கட்சிகளான திகழும் அ.தி.மு.க விற்கும், தி.மு.க விற்கும் தான் போட்டி என்று உறுதியாக கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மெஜாரிட்டி தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
ஆனால் அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்து என்னவென்றால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சியான தி.மு.கவிற்கும், புதிதாக ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே போட்டி நிலவ 80% வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மூன்று அல்லது நான்காவது இடத்திற்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்கு செல்ல மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால், அக்கட்சியின் உட்கட்சி பிரச்சனைகளால் மக்களுக்கு அ.தி.மு.கவின் மேல் ஏற்பட்ட அதிருப்தியும், செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியதால், அவரின் முகமாக அறியப்பட்டு வரும் கொங்கு மண்டல பகுதியில் வாக்கு வங்கியில் ஏற்பட போகும் மாற்றமுமே காரணமாக அமையும் என அவர்கள் கூறுகின்றனர்.