தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி விருது வழங்கி கௌரவித்த அமெரிக்கா!!!

0
139

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சர்வதேச ரோட்டரி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் உலகம் முழுவதும் குடிநீர், சுகாதாரம், நோய்த்தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை கவுரவித்து விருது வழங்கி வருகிறது.

உலகம் முழுவதும் இருந்து இந்த விருதுக்கான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பவுல் ஹாரிஸ் ஃபெல்லோ’ (Paul Harris Fellow) என்னும் கவுரவ விருது வழங்கப்படுகிறது. இது உலகளாவிய விருது என்பதால் மிகவும் பெருமைமிக்கதாக கருதப்படுகிறது.

குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு பாராட்டு தெரிவித்து அவருக்கு பவுல் ஹாரிஸ் ஃபெல்லோ’ என்ற சிறப்பு விருதை வழங்கி அமெரிக்க நிறுவனம் அவரை கவுரவித்துள்ளது.

Previous articleவாழும் விஞ்ஞானியாக கருதப்படும் அமைச்சருக்கே கொரோனாவா? பீதியில் கட்சியினர்?
Next articleமருத்துவமனையின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மனநிலை மருத்துவர்;? இதன் பின்னணி?