கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம்

0
115
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும்  இதுவரை 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வங்காளதேசத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 2.30 லட்சத்தை நெருங்குகிறது.  நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,29,185 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம் 16-வது இடத்தில் உள்ளது.
Previous articleஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் ஏவிய ஏவகணை அருகில் ரபேல் ஜெட் விமானங்கள்
Next articleகொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 5,865 ஆக அதிகரிப்பு