தமிழக முதல்வர் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி தோட்டக்கலை,கால்நடைத்துறை என 42 புதிய திட்ட பணிகளுக்கு ரூபாய் 8.69கோடி செலவில் இன்று அடிக்கல் நாட்டினார்.முன்னதாக கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் திறந்து வைத்து பின்,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தப்பட்டது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது திண்டுக்கல்லை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகின்றது.இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை மையம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அரசு சொன்ன வழிகளை கடைபிடித்தாலே போதும்.இந்த நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா பாதித்தவர்களின் இறப்பு எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கின்றது என்று கூறினார்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சியைக் குறித்து அவர் பேசியவாறு திண்டுக்கல்லை பொருத்தவரை சிறு குறு தொழில் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை அடைந்து உள்ளன.இதனால் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது.மேலும் தமிழ்நாட்டின் குடிநீர் திட்டத்தின் படி திண்டுக்கல் மாவட்டத்தின் குடிநீர் தேவை முழுவதுமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திண்டுக்கல்லில் நிறைய தடுப்பணைகள்
கட்டப்படுவதற்கான தீர்மானம் செய்யப்பட்டுள்ளன என்றும், முதல்வர் அந்த ஆலோசனை கூட்டத்தில் கூறினார்.
மேலும் தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை கூடுதலான இலவச அரிசி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசால் கடந்த மூன்று மாதங்களாக விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கி வந்தன.ஆனால் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அரிசியை தவிர்த்து மற்ற எல்லா ரேஷன் பொருட்களும் விலையுடன் கூடிய பொருட்களாக வழங்கப்படும் என்று கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது வருகின்ற நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் ரேஷன் அரிசி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.