தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக வலம்வரும் ரம்யா, தற்பொழுது லாக்டவுன் காலகட்டத்தில் வீட்டிலேயே இருப்பதால் சிலம்பம் கற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன்பின் தற்பொழுது சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்து வருகிறார். இவர் சிலம்பம் சுற்றும் காட்சியை சமூக வலைத்தளங்களில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
அதில் இது ஒரு வீரமங்கை ஆகுவதற்கு எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் பரிசு என்றும் சிலம்பம் என்பது தமிழர்களின் ஒரு அடையாளம் என்றும். அந்த தற்காப்புக்கலை நாம் அனைவரும் கற்றுக்கொண்டால் நல்லாருக்கும், குறிப்பாக பெண்கள் தங்களது பாதுகாப்பிற்காக இதனை கற்றுக் கொள்ளலாம்.
தமிழர்களுடைய பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்க நாம் அனைவரும் ஒன்றாக கை கூடுவோம். இதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் கைமாறு என்று சிலம்பக் கலையை பெருமிதம் படுத்தியுள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.