இருமொழிக் கொள்கையில் தமிழ் மற்றும் இந்தி மொழியா? பதிலளிக்க உயர்நீதிமன்றம் கெடு

0
111

தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையில் எந்தமொழி இரண்டாவதாக இருக்கும் என்பது தொடர்பாக அரசின் சார்பில் விளக்கம் அளிக்க தலைமைச் செயலாளர் அல்லது பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரமாணப் பத்திரம் ஒன்றினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்து வருகிறது.

இதில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு பழைய இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றப் போவதாக அறிவித்தது.

அதன்படி, தமிழக அரசுக் கொள்கையாக இருமொழிக் கொள்கையை மட்டுமே எடுத்துக் கொண்டால், அந்த இரு மொழியில் தமிழும், வேறு ஏதாவது மொழியா? அல்லது ஆங்கில மொழியே தொடருமா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளிக்க இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவகாசம் கேட்க கூடாது எனவும், குறிப்பிட்ட இரண்டு வார காலத்திற்குள் (ஆகஸ்ட் 20ம் தேதிக்குள்) பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleஅரசுதவி பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட என்ன செய்தீர்கள்? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
Next articleவந்தாச்சு ! கொரோனாவுக்கு தடுப்பூசி! ஆகஸ்ட் 12 வெளியீடு- சபாஷ் ரஷ்யா!