பெற்றோர்கள் கவனத்திற்கு:! பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

0
118

பெற்றோர்கள் கவனத்திற்கு:! பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

கொரோரவால் உலகமே ஸ்தம்பித்து கிடக்கும் நிலையில் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து பள்ளி கல்லூரி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.பள்ளி பொதுத் தேர்வுகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுஅனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது வரை நிகழ்வு கல்வி ஆண்டு இன்னும் தொடங்கவில்லை.பள்ளிகள் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தமிழ்நாடு பள்ளி கல்வி துறையால் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்அடிப்படையில் நிகழ்வு கல்வி ஆண்டிற்கான,6 முதல் 10 வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.இதைத்தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழும் ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட்டது.தற்போது இன்று முதல் 11 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு,மாற்றுச் சான்றிதழ்(TC) மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (MARKSHEET)கொண்டு வருமாறு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது?

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் இடம் வழங்கப்படமாட்டாது என்று கூறக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களது அடுத்தகட்ட நிலைக்கு செல்வதால் ஒன்றுக்கு, இருமுறை நன்றாக யோசித்து தாங்கள் படைக்கவிருக்கும் குரூப்பை தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில் மாணவர்கள் தற்போது தேர்ந்தெடுக்கும் குரூப்பின் மூலம் தான் அவர்களது அடுத்த கட்ட வாழ்க்கை இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleவேலையிழந்தோருக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 15 நாட்களுக்குள் பணம் வழங்கப்படும்!
Next articleசூரரைப் போற்று  படத்தை தொடர்ந்து அடுத்த பெரிய பட்ஜெட் படம் OTT தளத்தில் ரிலீஸ்!!