மதுரை பேராசிரியர் கண்டுபிடிப்பு: ‘சிமென்ட் கான்கிரீட்’டிற்கு மாற்றாக ‘பிளாஸ்டோன் பிளாக்’..! மத்திய அரசு காப்புரிமை!!

0
121

மதுரை தியாகராஜா பொறியியல் கல்லுாரி பேராசிரியர் கான்கிரீட்’டிற்கு மாற்றாக கண்டுபிடித்த ‘பிளாஸ்டோன் பிளாக்’கிற்கு, மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி கூறுகையில், இக்கல்லுாரி பேராசிரியர்களின் 5 கண்டுபிடிப்புகள் – அமெரிக்க காப்புரிமையும், 3 கண்டுபிடிப்புகள் – இந்திய காப்புரிமையும் பெற்றுள்ளன. மேலும், 27 கண்டுபிடிப்புகள் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில் இக்கல்லூரியின் டீன் வாசுதேவன், கான்கிரீட்’டிற்கு மாற்றாக கண்டுபிடித்த ‘பிளாஸ்டோன் பிளாக்’கிற்கு தற்போது இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது.

மேலும், இதுகுறித்து வாசுதேவன் கூறுகையில், பிளாஸ்டிக் கழிவுகள், ஜல்லி, கட்டுமான குப்பை, கிரானைட் கழிவுகள், பீங்கான் கழிவுகள், சுண்ணாம்பு கல்லுடன் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத சுற்றுச்சூழலுக்கு தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேர்த்து ‘பிளாஸ்டோன் பிளாக்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் கான்கிரீட்டைக் காட்டிலும் இது 10 மடங்கு வலிமை கொண்டது. இந்த ‘பிளாஸ்டோன் பிளாக்’கை நடைபாதைகள், வீடுகளுக்குள் தடுப்புச் சுவர்கள், சுற்றுச்சுவர், கழிப்பறைகள், கட்டட தரை, அலமாரி சிலாப்புகள், டைனிங் டேபிள்களுக்கு பயன்படுத்தலாம். இதன் செலவும் குறைவு, நீடித்து உழைக்கக்கூடியது, அதிக தேய்மானமும் இல்லை, எளிதில் உடையாது.

கடந்த 2006ம் ஆண்டு இதற்கான கண்டுபிடிப்பு துவங்கியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி அன்று மத்திய அரசு இதற்கான காப்புரிமையை வழங்கியது. இந்த கண்டுபிடிப்பிற்கு கல்லுாரி தாளாளர் கருமுத்து கண்ணன் ஊக்கம் அளித்தார். மேலும், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் ராமலிங்கம் சந்திரசேகரன், சுந்தர கண்ணன் உதவியாக இருந்தனர் என்று அவர் கூறினார். பிளாஸ்டிக் சாலை கண்டுபிடித்ததற்காக பேராசிரியர் வாசுதேவனுக்கு 2006ம் ஆண்டு மத்திய அரசு அதற்கான காப்புரிமையும், 2018ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகுலாம்நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாரா? காங். கட்சிக்குள் பிளவு!!
Next articleதமிழகத்தில் பொது முடக்க தளர்வுகள் குறித்து இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு !!