அரியர் தேர்வு ரத்து விவகாரம்:! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

0
73

அரியர் தேர்வு ரத்து விவகாரம்:! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

கொரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து பள்ளி மற்றும்,இறுதி ஆண்டை தவிர்த்து மற்ற ஆண்டு கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சியென்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.ஆனால்
கல்லூரி தேர்வில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு எந்தவிதமான அறிவிப்பையும் வழங்காமல் இருந்த தமிழக அரசு மற்றும் உயர்கல்வித் துறை அண்மையில்,மாணவர்களுக்கு சாதகமாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் கூறியதாவது,

கொரோனா பொது முடக்கம் காரணமாக,பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மற்றும் AICTE – யின் வழிகாட்டுதலின்படி தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு,பல எதிர்ப்புகள் வந்த வண்ணமே இருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து பொதுநல வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.இதுமட்டுமின்றி,AICTE தமிழ்நாடு அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று,அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியதாக,அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கூறப்பட்டது.இதற்கு பதிலடியாக AICTE அமைப்பானது இதுபோன்ற எந்தவிதமான கடிதத்தையும் அனுப்பவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் கருத்தை ஏஐசிடிஇ-யின் கருத்தாக கூறி வருகின்றது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் தெரிவித்தார்.இதுபோன்ற பல செய்திகள் ஊடகங்களில் உலாவந்து கொண்டிருக்கிறதே தவிர,அரியர்ஸ் ரத்து என்ற அறிவிப்பிற்கு,சரியான முடிவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதான் உண்மை.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையில் வாதிடப்பட்டதவாறு:

பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் மாணவர்களின் அரியர் அனைத்தும் ஆல்பாஸ் செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்ததாகவும்,மேலும் யூஜிசி அமைப்பானது இறுதி பருவத்தேர்வை தான் ரத்து செய்யக்கூடாது என்று கூறி உள்ளது என்றும்,தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததுள்ளது.

இதுகுறித்து வாதாடிய எதிர்தரப்பு வழக்கறிஞரான பாலகுருசாமி,அனைத்துப் பாடங்களிலும் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களை அரசின் இந்த அறிவிப்பு சோர்வடைய செய்துள்ளதாகவும்,மேலும் இந்த அறிவிப்பானது கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் தரத்தை தாழ்த்தும் வகையிலும் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து பேசிய அவர் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும்,கிடைக்கும் என்று கூறிய வழக்கறிஞர் இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம்,இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு,ஏஐசிடிஇ,யூஜிசி ஆகியவை வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.