அது எங்க கோட்டை உள்ள நுழையவே முடியாது! கெத்துக்காட்டிய எஸ்.பி.வேலுமணி!

0
215

ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்டத்தை கைப்பற்ற நினைக்கின்றார் அவருடைய கனவு பலிக்காது என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கின்றார்.கோவையில் அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது அந்த கூட்டத்திற்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையேற்றார்.

இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் இடையே உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி கோவை வந்து போகின்றார். அதோடு அவர் பல பொய் புகார்களை தெரிவித்து வருகின்றார்.

எப்படியாவது கோவை மாவட்டத்தை தங்கள் வசம் பிடித்து விட வேண்டும் என்று ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருக்கின்றார், அந்த கனவுகள் எப்போதும் பலிக்காது. கோவை மாவட்டம் அம்மாவின் கோட்டை எனவும், இதை யாராலும் அசைக்க முடியாது என்றும், தெரிவித்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி வேலுமணி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொங்கு மண்டலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நலத்திட்டங்களையும் செய்திருக்கின்றார் 50 ஆண்டுகளில் செய்ய முடியாதவை ஐந்து வருடங்களில் அவர் நிறைவேற்றி காட்டியிருக்கின்றார் ஆகவே மக்களிடம் வாக்கு கேட்க எங்களுக்கு மட்டும் தான் தகுதி இருக்கின்றது எதிர்க்கட்சியினருக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்று தெரிவித்திருக்கின்றார்.

அவர்கள் பொய் பிரச்சாரம் மட்டுமே செய்து வருகிறார்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பொய் பிரச்சாரங்களை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.தேர்தல் சமயத்தில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும் திமுக அடுத்த தேர்தலுக்கு பின் காணாமல் போய்விடும் என்று தெரிவித்திருக்கிறார் எஸ்.பி வேலுமணி.

Previous articleமுதல்வர் செய்த வேலையால்! அதிர்ச்சிக்குள்ளான திமுக!
Next articleமதிமுக எடுத்த அதிரடி முடிவு! தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here