பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜகவின் டி எச் சங்கரமூர்த்தி கடிதம் எழுதி இருக்கின்றார்.
அத்வானி சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் இருந்து வருகின்றார். ஆர் எஸ் எஸ் பாரதிய ஜனதா சங்கம் மூலமாக அவர் நாட்டிற்கு செய்த தியாகம் மற்றும் பங்களிப்பு அளப்பரியது.
அவருடைய பொது வாழ்க்கை, மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், நேர்மையான மனிதர் நம்பகத்தன்மை இருக்கும் ஒரு தலைவர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான அறிவும், அனுபவமும், பெற்ற ஒரு மனிதர்.
நாம் அனைவரும் பெருமிதம் அடையும் நபர்களில் அத்வானியும் ஒருவர், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் ஆசைப்படுகிறார்கள்.
அவர் அனைத்து வகையிலும் உயர்ந்த மனிதர், புகழ் பெற்றவர், மற்றும் அந்த விருந்திற்கு பொருத்தமானவர் கர்நாடக பாரதிய ஜனதாவின் தொண்டர்கள் சார்பில், அத்வானிக்கு பாரத ரத்னா விருதை தயவுகூர்ந்து வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன், என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்து இருக்கின்றார்.
அத்வானி அவர்கள் நேற்றைய தினம் தன்னுடைய 93வது பிறந்தநாளை கொண்டாடிய இருக்கின்றார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, போன்றோர் அத்வானியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். எல். கே அத்வானி 1927ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி கராச்சியில் பிறந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் அவருடைய குடும்பம் இந்தியாவிற்கு வந்துவிட்டது.