கோயமுத்தூர் மாவட்டம் தொடர்பாக கனிமொழி பேசுவது சரியல்ல என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கின்றார்.
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியிலே செய்தியாளர்களிடம் பேசிய திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிதிகள் ஒதுக்கப்பட்டும் கூட இதுவரையில் எந்த ஒரு திட்டமோ, அல்லது பணியோ, அரசு சார்பாக முன்னெடுக்கப்படவில்லை நொய்யல் ஆறு மிகவும் மோசமாக இருக்கின்றது கோயம்புத்தூர் மாவட்டம் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றது. அதிமுகவை சார்ந்தவர்கள் மட்டும் தான் வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார்.
திமுகவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்த இந்த கருத்துக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி கோயமுத்தூர் மாவட்டம் தொடர்பாக கனிமொழி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. யாரோ எழுதிக் கொடுத்த ஒன்றை அவர் பேசிக் கொண்டு இருக்கின்றார், எனக் குற்றம்சாட்டி இருக்கிறார் அமைச்சர் வேலுமணி.
அதோடு திமுகவிற்கு குறை கூறுவதற்கு மட்டுமே தெரியும் என்று தெரிவித்த அமைச்சர், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், வளர்ச்சித் திட்டங்களையும், செய்திருக்கின்றோம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் நாட்டிலேயே கோவை மாவட்டத்தில்தான் அதிக வீடுகள் கட்டி தரப்பட்டிருக்கின்றன .டெல்டா மாவட்டங்கள் சென்னை, மதுரை, என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து இருக்கின்றது எனவும் தெரிவித்திருக்கின்றார்.