சவால்மிக்க அணியை எதிர்கொள்ள தயாராகுங்கள்! இந்திய அணியை எச்சரிக்கை செய்த கெவின் பீட்டர்சன்!

Photo of author

By Sakthi

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்து நாட்டிற்கு திரும்பி இருக்கின்ற நிலையில், ஜோ ரூட் தலைமை ஏற்றிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. முதலாவது போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி சென்னையில் ஆரம்பிக்கிறது. என்று தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில். கடுமையான சவால் மிக்க ஒரு உண்மையான அணி அடுத்துவரும் வாரத்தில் இந்திய நாட்டிற்கு வருகை தர இருக்கிறது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஆஸ்திரேலியாவில் பல தடைகள் இருந்தன. அதை அனைத்தையும் உடைத்து விட்டு டெஸ்ட் தொடரை வென்று இருப்பதால் இந்திய வீரர்கள் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடி வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சவால்மிக்க உண்மையான அணி அடுத்துவரும் வாரத்தில் இந்திய மண்ணில் கால் பதிக்க இருக்கிறது. உங்களுடைய சொந்த நாட்டில் அவர்களை தோற்கடிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆகவே எச்சரிக்கையாக இருங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் கொண்டாட்டத்தை தவிர்த்து விடுங்கள் என தெரிவித்திருக்கிறார்.