ஜப்பான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பதட்டத்தில் மக்கள்!

0
154

ஜப்பான் நாட்டில் தற்போது ஒரு சில முக்கிய பகுதிகளில், கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவிலான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

முக்கியமாக ஜப்பானின் இட்டோகாவா என்ற பெருநகரில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிலர் கைகளில் குடை விரித்தவாறு நடந்து செல்கின்றனர்.

இதனால் தற்போது ஜப்பான் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மக்களையும் தங்களின் வீட்டிற்குள்ளே இருக்கும் படி அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. ஏனெனில் அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் கூறியதாவது: “பனிப்புயல் தாக்கம் அதிக அளவில் இருப்பதால், மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிற்குள் இருப்பதே பாதுகாப்பானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

வானிலை மையத்தின் தகவலை கருத்தில்கொண்டு இச்சூழல் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அந்நாட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Previous articleஎன் அனுபவம் தான் அவருடைய வயது! உதயநிதிக்கு சுளீர் பதிலளித்த முதலமைச்சர்!
Next articleசெவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம் தரையிறங்கியது – நாசா