குஷ்புவுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

0
129

தேர்தல் நெருங்கி வருவதால் திமுக அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு போன்றவற்றை உறுதி செய்து இருக்கிறார்கள். அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும், ஒதுக்கப்பட்டு இருக்கின்றன இதில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னரே அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது.

இந்த நிலையில், பாஜக அந்தக் கட்சிக்கு கொடுக்கப்பட்ட 20 தொகுதிகளில் நேற்றைய தினம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதன்படி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ களம் காண இருக்கின்றார்.இதற்கு முன்பு நடிகை குஷ்பூ சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த விதத்தில் அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி நிச்சயமாக நாங்கள் கைப்பற்றுவோம் என்று தெரிவித்திருந்தார். ஆகவே அவருக்கு அந்த தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு பாஜக சார்பாக சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவைச் சார்ந்த உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இந்த தொகுதி கருணாநிதியின் குடும்பத்துக்கு மிக ராசியான தொகுதி என்று சொல்லப்படுகிறது. இந்த தொகுதில்தான் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றதாக சொல்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் திமுக சென்னையை பொருத்தவரையில் அந்த தொகுதியில் இன்று வரையில் ஒரு மிகப்பெரிய செல்வாக்குடன் திகழ்ந்த வருவதாக தெரிவிக்கிறார்கள். ஆகவே இந்த முறை உதயநிதி ஸ்டாலினை சட்டசபைக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திமுக நிச்சயமாக வெற்றி பெறும் தொகுதியாக பார்த்து அவரை களம் இருக்க முடிவு செய்த திமுக தலைமை அவர்கள் தனி செல்வாக்குடன் இருந்து வரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் களம் இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

அதோடு அந்த தொகுதி நம் குடும்பத்திற்கு மிக ராசியான தொகுதி என்று திமுக தலைமையால் அறிவுறுத்தப்பட்டதால் உதயநிதி ஸ்டாலினும் அதனை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கிறார்கள்.சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து தான் மு க ஸ்டாலின் முதன்முதலாக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்படி அவரை முதன்முதலில் சட்டசபைக்கு அனுப்பிய ஆயிரம்விளக்கு தொகுதியில் தான் போட்டியிடுவார் என்று நினைத்து இருந்தார் நடிகை குஷ்பு. ஆனால் தற்சமயம் அவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவது குஷ்புவுக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாக கூறுகிறார்கள்.

அதேவேளையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மையம் ,டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் வாக்காளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே இந்த இரு கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு செல்லும் வாக்குகளை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறு ஓட்டுக்கள் சிதைந்து நம்முடைய வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமோ என்று குஷ்புவும் அதே போல நம்முடைய கூட்டணி வெற்றி வாய்ப்பு தடைபடுமோ என்று அதிமுகவும் பயத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

Previous articleசசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்!
Next articleஇந்த தேர்தலிலும் பா.ஜ.க. தான் வெற்றி! அமித்ஷாவின் அளவற்ற நம்பிக்கை! இதனை எதிர்க்கும் பொதுமக்கள்!