தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் வேலையை காட்டிய எண்ணெய் நிறுவனங்கள்!

0
137

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன. கடைசியாக ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்த்தப்பட்டது. அதேபோல டீசல் ஒரு லிட்டருக்கு 50 காசுகளும் குறைக்கப்பட்டது அன்று முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் தற்சமயம் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சுமார் பதினேழு நாட்களுக்கு பின்னர் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசுகள் அதிகரிக்கப்பட்டு 92.5 ஐந்து காசுக்கு விற்பனையாகிறது இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

Previous articleதமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் செவிலியர்கள்!
Next articleதொடங்கியது திமுக-வின் அராஜகம்! அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக!