நீரில் மிதக்க போகும் எட்டு மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
195

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, இன்றைய தினம் திருச்சி, விழுப்புரம், தேனி, நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதோடு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களான டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை மற்றும் வட கடலோர மாவட்டங்கள் அதோடு புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மே மாதம் 21 ஆம் தேதியான நாளைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதோடு புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை மற்றும் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசான மழை பொழிய கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் நாளை மறுநாள் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleதமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு! கடும் கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!
Next articleஇனி வீட்டில் நீங்களே கொரோனா டெஸ்ட் செய்யலாம்! புதிய டெஸ்ட் கிட் CoviSelf-க்கு ICMR அனுமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here