வாகன ஓட்டிகளுக்கு கவலையளிக்கும் பெட்ரோல் டீசல் விலை!

0
196

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்திய நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை என்னை நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. நோய் தொற்று காரணமாக, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. அதோடு தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்ததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து இருக்கிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 76 காசுகளும்,டீசல் விலை லிட்டருக்கு 58 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 90 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

Previous articleதமிழகத்தில் பெய்யப் போகும் மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
Next articleநாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here