தொற்று குறைந்துள்ள இந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இருக்கலாம்!

0
83

வருகின்ற ஜூன் 7 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடியப் போகும் நிலையில் நோய் தொற்று குறைந்துள்ள காஞ்சிபுரம் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகள் கொடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொற்று குறைந்துள்ள சில மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் காய்கறி பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் வாகனங்கள் மூலமாக அந்தந்த ஊர்களுக்கு சென்று விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனால் பெருவாரியாக தொற்று குறைந்துள்ளது.

ஜூன் 7-ஆம் தேதி உடன் ஊரடங்கு முடிவதால் முதலமைச்சர் அவர்கள் நேற்று புதன்கிழமை சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி செலுத்துவது குறித்து , காய்ச்சல் முகாம் நடத்துவது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொற்று வெகுவாக குறைந்து உள்ள செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை மற்றும் பெண்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளிக்கப்பட்டு ஊரடங்கு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு அதிகமுள்ள திருப்பூர் கோவை சேலம் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது அலையின் காரணமாக அதற்கான முன் ஏற்பாடுகளை தமிழக அரசு விரைவாக செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா 12 நாட்களாக குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் தோற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21 , 48 , 364 உள்ளது. அதேபோல் ஒரே நாளில் 483 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் இறப்பு எண்ணிக்கை 25200 ஆக உள்ளது.

தினசரி தொற்று எண்ணிக்கையில் கோவை தான் முதலிடத்தில் உள்ளது. திருப்பூர் ஈரோடு சேலம் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேல் தினசரி தொற்றுகள் உறுதியாகியுள்ளது.