எதிர்வரும் மூன்று தினங்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் திண்டாட்டம்தான்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
181

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்றைய தினம் உதகை கோவை போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு, போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

வரும் 15ஆம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஊட்டி இருக்கின்ற உதகை மற்றும் கோவை திண்டுக்கல், தேனி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதோடு புதுவை, காரைக்கால், போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

Previous articleபோக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்த இனிப்பான செய்தி! பொதுமக்கள் சற்றே நிம்மதி!
Next articleகஞ்சா கடத்திய வாலிபர்கள் 3 பேர் கைது! காவல்துறை கண்காணிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here