பல முக்கிய வீரர்கள் விலகல்? இலங்கை அணி தடுமாற்றம் இந்தியாவுடன் விளையாட பயமா?

0
111

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால் 20 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் ஏ பிரிவு இலங்கைக்கு சென்று இருக்கிறது.

இதில் முதலில் ஜூலை மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்க இருந்த தொடர் இலங்கை அணியில் நோய் தொற்று பரவியதன் காரணமாக, ஜூலை மாதம் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 20ஆம் தேதியும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 23ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதேபோல முதல் டி20 போட்டி ஜூலை மாதம் 25ஆம் தேதி, 2வது டி20 போட்டி ஜூலை மாதம் 27ஆம், தேதியும் மூன்றாவது டி20 போட்டி ஜூலை மாதம் 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அணியில் ஷிகர் தவான், பிரித்விஷா, படிக்கல், ருத்ராஜ், நிதிஷ் ராணா, மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, இஷாந்த் கிஷான், சஞ்சு சாம்சன், யுவேந்திர சாகல், ராகுல் சாகர் கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்டியா, குல்தீப் யாதவ் வரும் சக்கரவர்த்தி புவனேஸ்வர் குமார் தீபக் சாகர் நவ்தீப் சைனி சேட்டன் சர்க்காரியா உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த தொடருக்கான இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் தனுஷ்கா குணதிலக மற்றும் நிரோஷன் பில்லா உள்ளிட்ட 3 வீரர்கள் இங்கிலாந்து நாட்டில் பயோ பபுளில் மீறியதற்காக தடைவிதிக்கப்பட்ட இருக்கிற சூழ்நிலையில், இன்னொரு மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவர்களும் சம்பள பிரச்சனை காரணமாக, இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார் அதே போல இன்னொரு மூத்த வீரர் திசாரா பெரேராவும் இந்த தொடரில் இருந்து விலக இருப்பதாக நேற்று முன் தினம் தகவல் கிடைத்தது. இங்கிலாந்து நாட்டில் விளையாடிய சமயத்தில் அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இதுவரையில் குணமடையாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், இலங்கை அணியில் இருந்து முன்னாள் கேப்டன் குசல் பெரேரா அவர்களும் விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பு ஒன்றில் காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் குசல் பெரேரா பங்கேற்க இயலாது. பயிற்சியின்போது அவருக்கு வலது தோள்பட்டையில் சுளுக்கு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleடி20 உலகக் கோப்பை அணிகளின் அட்டவணை வெளியீடு! இந்தியாவின் பரம எதிரியும் ஒரே பிரிவில் இடம் பெற்று இருப்பது அதிசயம் தான்!
Next articleஉள்ளேன் ஐயா! முதல் ஆளாக கை தூக்கிய முக்கிய வீரர்!