பொதுமக்களுக்கு இன்பச் செய்தி!! பேருந்துகளில் இனி இது உண்டு!!

0
141

பொதுமக்களுக்கு இன்பச் செய்தி!! பேருந்துகளில் இனி இது உண்டு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் வைரஸை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா வைரஸின் இரண்டாவது தாக்கம் கட்டுக்குள் வந்தது.

வைரஸின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து, தற்போது திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பேருந்துகளிலேயே சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி போன்ற இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்து திருப்பதி செல்லும் பக்தர்கள் திருமலையில் சிறப்பு தரிசனம் பெற விரும்பினால், அதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்தது. கொரோனா காரணமாக இந்த வசதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பேருந்துகளிலேயே இனி சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் சென்னை, பெங்களூர், புதுச்சேரி போன்ற நகரங்களில் திருப்பதி செல்லும் பேருந்துகளில் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Previous articleஆடி மாத பவுர்ணமி விரதத்தால் கிடைக்கும் முக்கிய பயன்கள்!
Next articleஆடிப் பெருந்திருவிழா! மோகினி திருக்கோலத்தில் காட்சி அளித்த கள்ளழகர்!