பேட்மிண்டன் காலிறுதி வாய்ப்பை இழந்த இந்திய ஆண்கள் ஜோடி!

0
282

பேட்மிட்டன் போட்டியில் இந்திய ஆண்கள் ஜோடியான சிராக் செட்டி, சாதிக் சாம்ராஜ், ஜோடி ஏ பிரிவில் இடம் பிடித்து இருந்தது. அதே பிரிவில் இந்தோனேசியா சீன தைபே, கிரேட் பிரிட்டன் ஜோடிகளும் இதே பிரிவில் இடம் பிடித்து இருந்தனர். ஒவ்வொரு ஜோடியும் மற்ற ஜோடியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் ஜோடி காலிறுதிக்கு முன்னேறும் என்று சொல்லப்படுகிறது.

இந்திய ஜோடி முதல் ஆட்டத்தில் சீன தைபே ஜோடியை எளிதாக வெற்றி பெற்றது. இருந்தாலும் இந்தோனேசியாவுக்கு எதிராக விளையாடிய இந்திய ஜோடி படுதோல்வியை சந்தித்தது. நேற்றைய தினம் பிரிட்டனுக்கு எதிராக 2-0 என்று வெற்றியடைந்தது.

இந்தோனேசியா, சீன தைபே, இந்திய ஜோடிகள் தலா இரண்டு வெற்றிகளை பதிவு செய்திருந்தது. இருந்தாலும் இந்தோனேசியா ஜோடி 140 புள்ளிகள் பெற்று வெற்றி அடைந்து இருக்கிறது. 108 புள்ளிகளை இழந்திருந்தது அந்த ஜோடி.

சீன தைபே 161 புள்ளிகள் பெற்று இருந்தது 151 புள்ளிகள் இழந்திருந்தது. இந்திய ஜோடி 131 புள்ளிகள் பெற்று வெற்றி அடைந்திருந்தது 140 புலிகளை இந்திய ஜோடி இழந்திருந்தது. இதன் காரணமாக, புள்ளிகளின் அடிப்படையில் இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட ஜோடிகள் கால் இறுதிக்கு முன்னேறி இருக்கின்றன. இந்திய ஜோடி காலிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.

Previous articleடேபிள் டென்னிஸ்! ஏமாற்றம் அளித்த இந்திய வீரர்!
Next articleபாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here