டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவுக்கு குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்த முதல் வீராங்கனை !! அரையிறுதிக்கு தகுதி!!
இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான லோவ்லினா போர்கோஹெய்ன் முதல் முறை ஒலிம்பிக்கிற்கு அறிமுகமானார். இவர் 69 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதி வரை முன்னேறினார். காலிறுதியில் உக்ரைனின் அன்னா லைசென்கோ உடன் மோதினார். மேலும் காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்த வருடம் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் குத்துச்சண்டை பதக்கத்தை இவர் உறுதி செய்துள்ளார். முன்னாள் சீன சாம்பியன் தைபேயின் நியான்-சின் சென்னும் இன்று அரையிறுதிக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
23 வயதான லோவ்லினா அஸ்ஸாமை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 4-1 என்ற கோல் கணக்கில் உக்ரைனின் அன்னா லைசென்கோவை தனது காலிறுதி ஆட்டத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார். மேலும் இவர் அரையிறுதியில் உலக சாம்பியனான துருக்கியை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான புசெனாஸ் சுர்மெனெலிக்கு எதிராக லோவ்லினா போட்டியிடுவார். போர்கோஹெய்ன், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பயிற்சியாளர் முகமது அலி கமர் பிடிஐயிடம் கூறியதாவது: லோவ்லினா காலிறுதியை தொடங்குவதற்கு மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார்.
காலிறுதியில் ஒரு மிகப்பெரிய எதிர் தாக்குதல் ஆட்டத்துடன் தொடர்ந்தார் மற்றும் வெற்றிகரமான மூன்று நிமிடங்களில் தனது பாதுகாப்பை மிகவும் இறுக்கமாக வைத்திருந்தார். “அவர் எதிர் தாக்குதல் மற்றும் அவரது உயரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்தில் சிக்கிக்கொண்டார்.
இதற்கு முந்தைய போட்டியில் போட்டியிட்ட வீராங்கனையுடன் ஆக்ரோஷமாக விளையாட முயற்சித்ததால், லோவ்லினா அந்த போட்டியில் தோல்வி அடைந்தார். எனவே இந்த முறை, நாங்கள் அவளிடம் ‘ஆப் காதே ரஹோ, உஸ்கோ அனே டூ’ என்று சொன்னோம்,” என்றார். மேலும் லோவ்லினா திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு அவர் தாக்குதலைத் தொடர முயற்சித்திருந்தால், அவர் வெற்றி பெறுவார், “என்று அவர் கூறினார்.