டோக்கியோ ஒலிம்பிக்: நான் நாட்டிற்காக விளையாடினேன்!! சாதி கொண்டு அவமதிக்கிறீர்கள்!! மனமுடைந்த ஹாக்கி அணி வீராங்கனை!!
டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதியில் இந்தியா அர்ஜென்டினாவிடம் புதன்கிழமை தோற்ற பிறகு, இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனையான வந்தனாவின் குடும்பத்தினர், அவர்களின் பகுதியிலுள்ள இளைஞர்களால் அவமதிக்கப்பட்டனர். மேலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோற்றதை ஹரிதுவாரில் உள்ள இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து, நடனமாடி கொண்டாடினார்கள். இது போக சாதி வேறுபாடுகளைக் கூறி வந்தனாவின் குடும்பத்தினர் அவமதித்தனர். வந்தனாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், முக்கிய குற்றவாளியான விஜய்பாலை போலீஸார் நேற்று கைது செய்தனர். ஹரிதுவார் காவல்துறையின் அறிக்கையின்படி, சிட்கல் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 504 மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் விஜய் பால், அங்கூர் பால் மற்றும் சுமித் சவுகான் மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெண்கலப் பதக்கத்தின் பிளேஆஃப் போட்டியில் பிரிட்டனிடம் இந்தியா 4-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் பிறகு, இந்தியாவின் மூன்று கோல்களில் ஒன்றைப் பெற்ற வந்தனா அந்த சம்பவத்தை பற்றி கூறியதாவது: நான் வீட்டிற்கு நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டேன்.ஆனால் இதுவரை தன் குடும்பத்தினருடன் பேசவில்லை. தனது குடும்பத்திற்கு ஏதேனும் செய்தி இருக்கிறதா என்று கேட்டபோது, அவர் கூறியது: “ நாங்கள் அனைவரும் நாட்டுக்காக விளையாடுகிறோம், தற்போது என்ன நடந்ததோ அது நடந்திருக்கக் கூடாது இனியும் நடக்கக்கூடாது. இது போன்ற சாதிவெறி கருத்துகள் சரியானது அல்ல. இது போன்று யாரையும் தரகுறைவாக நடதாதீர்கள்.” அவர் மேலும் கூறினார், “ ஹாக்கியில் நாங்கள் என்ன செய்தோம் என்பதை பற்றி மட்டும் யோசியுங்கள் அணியில் இருப்பவர்கள் அனைவரும் இளம்பெண்களாக உள்ளோம் மேலும் நாங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம் எனவே நாங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதுவே முக்கியமானது.
வந்தனாவின் சகோதரர் கூறியதாவது: தேசிய அணியில் எனது சாதியைச் சேர்ந்தவர்கள் எப்படி விளையாட முடியும்? என்று கூறி எங்களை கொலை செய்வதாக இளைஞர்கள் மிரட்டியதால் எங்கள் குடும்பம் அச்சத்தில் உள்ளது. முழு சம்பவத்தையும் விவரித்து நாங்கள் புகார் அளித்துள்ளோம். வந்தனா இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட கருத்துகளை தெரிவிக்கவில்லை, அவர் தனது குடும்பத்தினருடன் பேசிய பிறகு தான் அது பற்றி பேசுவேன் என்று கூறினார். “நான் இங்கு வந்ததிலிருந்து எனது தொலைபேசியை அணைத்து வைத்திருந்தேன், அதனால் நான் யாரிடமும் பேசவில்லை,” என்று அவர் கூறினார். நான் அவர்களிடம் பேசும்போது, இந்த சம்பவம் குறித்து நான் கருத்து தெரிவிப்பேன். நாங்கள்
அனைவரும் நாட்டுக்காக விளையாடுகிறோம். அணியின் முயற்சிகள் குறித்து பெருமைப்படுவதாக வந்தனா கூறினார். “முதலில், எங்கள் முழு குழுவும் இதற்காக மிகவும் கடினமாக உழைத்தது, நான் அவர்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். போட்டிக்கு ஏற்ப போட்டியை மேம்படுத்தினோம். இவ்வளவு தூரம் சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ”என்று அவர் கூறினார்.