நவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு!
கல்வியில் தேர்ந்தவர்கள், தேறாதவர்களோ பெண்கள் என்றாலே தாய்மை அடைவதில் தான் பெண்மையை உணர்வார்கள். திருமணம் முடிந்ததை அடுத்து ஒவ்வொருவரும் புதுமண தம்பதிகளிடம் கேட்கும் கேள்வி குழந்தை பற்றியதாகத்தான் இருக்கும். எல்லா பெண்களுக்குமே குழந்தை என்பது ஒரு எதிர்பார்ப்பு நிறைந்த விஷயம் தான்.
பெங்களூர் மருத்துவமனையில் நடைபெற்ற உலக சுகாதார நாள் விழாவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டார். அப்போது அவர் இவ்வாறு பேசினார். இந்தியாவின் நவீன பெண்கள் பலர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றிய எண்ணம் அவர்களுக்கு சிறிதும் இல்லை.
வாடகை தாய் மூலம் குழந்தை பெறவே விரும்புகிறார்கள். இது சரியான எண்ணம் கிடையாது. மேற்கத்திய கலாச்சாரம் நமது நாட்டில் வேகமாக பரவி வருகிறது. நமது தாத்தா, பாட்டியுடனான உறவு முறைகளை நாம் கவனத்தில் கொள்ள மறந்து விட்டோம் என்று கூறினார். மன அழுத்தத்தை கையாள்வது ஒரு சிறந்த கலை. நாம் இந்தியர்களாக இருப்பதால் அதை கற்க வேண்டிய அவசியம் இல்லை.
இதை நாம் தான் பிற நாட்டு மக்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் கூறினார். ஏனென்றால் நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் யோகா, தியானம், பிராணயாமம் போன்ற பயிற்சிகளை நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு தான் சென்றுள்ளனர். நாம் அதில் பல தொன்மையான விஷயங்களை பழக்கப்படுத்திக் கொள்ள மறந்து விட்டோம்.
அதை பழகினால் எந்த ஒரு மனச் சோர்வுக்கும் நாம் ஆளாக மாட்டோம் என்று கூறினார். கொரோனா கால கட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தொட கூட குடும்பத்தினர்கள், மற்றும் உறவினர்கள் தயாராக இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு மனநிலை தான் காரணம் என்றும் கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒன்றரை கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குகியுள்ளது. இதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் பேசினார்.