தமிழ் சீரியல்களில் அதிகமான ரசிகர்களை தனது வசம் வைத்திருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். வழக்கமான சீரியல்கள் போல அழுகை, வில்லத்தனம், நெகட்டிவிட்டி என எதுவும் இல்லாமல் இயல்பான குடும்ப வாழ்க்கையை இந்த நாடகம் பிரதிபலிக்கிறது.
அன்பாக இருக்கும் நான்கு சகோதரர்கள், அவர்களுடைய மனைவிகள், கூட்டு குடும்பம் என இதை சுற்றியே அமைந்த குடும்ப சூழல் கதை.
இந்த சீரியலில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தது, அவர்களது அம்மாவின் மரணம், தனத்தின் பிரசவம் என அத்தனை எபிசோடுகளும் மக்களால் விரும்பி பார்க்கப்பட்டவை ஆகும்.
இதில் முதல் அண்ணனாக நடிகர் ஸ்டாலினும் அவரது மனைவியாக சுஜிதாவும் வருகின்றனர். இரண்டாவதாக வெங்கட் அவருடைய மனைவியாக ஹேமா ராஜ், மூன்றாவதாக குமரன் இவருக்கு மனைவியாக முதலில் விஜே சித்ரா நடித்திருந்தார்.
சித்ரா இதற்க்கு முன் பல சீரியல், நிகழ்ச்சிகளில் வந்திருந்தாலும் ந்த முல்லை கேரக்டர் சித்ரா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதனை ரசிகர்களையும் தனது பக்கம் அள்ளிக்கொண்டார்.
கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் தேதி சித்ரா பூந்தமல்லியை அடுத்த தனியார் விடுதியில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இவரது இறப்பு சின்னத்திரை உலகத்திற்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருந்தது.
அதன் பிறகு பாரதி கண்ணம்மாவில் நடித்து கொண்டிருந்த கொண்டிருந்த காவ்யா முல்லை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். சித்ராவுக்கு பிறகு காவ்யாவை முல்லையாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களும் இருக்கிறார்கள் அதே நேரம் இன்னமும் ஏற்று கொள்ளா ரசிகர்களும் உண்டு.
இந்நிலையில் காவ்யா பாண்டியன் ஸ்டார் சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் ‘வேட்டையன்’ கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் கவின்.அதன் பிறகு பிக்பாஸ் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
தற்போது லிப்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஊர்க்குருவி என்னும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக காவியா இணையவிருப்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக போகிறார் என தகவல்கள் வெளியாகின்றன.