இவர்களுக்கு பாதி போனஸ் தான்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
தற்பொழுது தீபாவளி பண்டிகை வரை இருப்பதால் அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். அந்தவகையில் இவ்வருடம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளது. அந்த வகையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் எந்தெந்த துறைக்கு போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை இரு தினங்களுக்கு முன் வெளியிட்டது. பி மற்றும் சி பிரிவு நான் கெசட் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கூறியது. அந்த வகையில் பி பிரிவு ஊழியர்கள் மற்றும் பி பிரிவு உள்ள நான் கெசட் பிரிவினருக்கு மட்டும் போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
அந்த வகையில் ராணுவ படையினர் ஆயுதப் படையினர் ஆகியோருக்கு ஒரு மாத ஊதியம் போனசாக வழங்கப்படும். மேலும் மத்திய அரசு அலுவலகங்களில் ஓராண்டில் 240 நாட்கள் வீதம் மூன்றாண்டுகள் தினக்கூலியாக பணியாற்றிய ஊழியர்களுக்கு போனஸ் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் அதனால் அவர்களுக்கு போனஸ் வரும் என்று எதிர்பார்த்து வந்தனர். அந்தவகையில் தபால்துறை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக மத்திய அரசு தற்போது கூறியது உள்ளது. இந்த ஊழியர்களுக்கு பாதி போனஸ் மட்டுமே வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.
பாதி நாட்களுக்கான போனஸ் மட்டுமே அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். ராமின் டாக் சேவாக், கேஷுவல் தொழிலாளர்கள், குரூப்பில் நான் கெசடட் அதிகாரிகள், எம்டிஎஸ் மற்றும் குரூப் சி ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் ரூ 7000 போனஸாக கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 120 நாட்கள் உற்பத்தி திறன் இணைக்கப்பட்ட போனசை கெசட்டட் அல்லாத ஊழியர்களுக்கு வழங்குவதற்கான கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. அதனால் தபால் துறை ஊழியர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.