நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை!
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் செய்வதாக பல அறிக்கைகளை வெளியிட்டது. அவற்றில் ஒன்றுதான் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ளவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்வது ஆகும். அந்த வகையில் இன்றுவரை அதற்கான அரசாணை அமலுக்கு வரவில்லை. அதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள 5 சவரனுக்குள் உள்ள நகைகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். அதனையடுத்து அந்த அறிவிப்பிற்கு பிறகு கூட்டுறவு வங்கிகளில் பல நகை கடன் மோசடி நடக்கிறது என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
அவ்வாறு மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். மேலும் தற்பொழுது ஒரு குழு ஒன்று அமைத்து ,ஐந்து சவரனுக்கு கீழுள்ள நகைகளில் பட்டியலை எடுக்கக் கோரியும் மேற்கொண்டு கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடக்கின்றதா என்பதே கண்காணிக்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். அந்த வகையில் நகை கடன் தள்ளுபடி மற்றும் அங்கு நடைபெறும் முறைகேடு ஆகியவற்றை குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி ,செயலாளர் நசிமுதீன் மேலும் கூட்டுறவு துறையில் உள்ள உயர் அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் பெற்றவர்கள் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்திற்குள் அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த அரசாணை அமலுக்கு வந்தால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் கூறினார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் 5 பவுனுக்கும் அதிகமாக ஒரு மில்லி அல்லது 2 மில்லி அளவு நகையின் எடை அதிகமாக இருந்தால் அது தள்ளுபடி செய்யப் படாது என்று கூறியுள்ளனர். இதுநாள் பலர் 5 பவுன் தள்ளுபடியை 6 பவுனாக மாற்றம் செய்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு தற்போது வரை எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.