பயணிகளின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் இரயில்களில், நவம்பர்-1 முதல் அன்ரிசர்வ்டு பெட்டிகளையும் இணைத்து இயக்க இரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் கொரோனா முதல் அலை பரவல் தீவிரமடைந்த காரணத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பிறகு முதல் பரவல் தொற்று பாதிப்பு குறைந்து விட்டதால் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் ரிசர்வ்டு பெட்டிகளுடன் மட்டுமே இயக்கி வந்தது தெற்கு இரயில்வே.
இந்நிலையில், தற்போது 2-வது அலை பாதிப்பும் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் எல்லாம் திறந்து விட்டன. மேலும், தியேட்டர்களிலும், 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டு விட்டன. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். பேருந்துள் ஏற்கனவே 100 சதவீத இருக்கைகளுடன் இயக்கப்படும் நிலையில், தமிழகத்தில் அன்ரிசர்வ்டு பெட்டிகளுடன் இரயில்கள் எப்போது இயக்கப்படும்? என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடையே இருந்தது வருகிறது.
அன்ரிசர்வ்டு பெட்டிகளுடன் இரயில்கள் இயக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பி, இரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அன்ரிசர்வ்டு பெட்டிகளுடன் இரயில்களை இயக்கமுடியும் என தெற்கு இரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில், தெற்கு இரயில்வே அதிகாரி ஒருவர், நவம்பர் மாதம் தொடக்கத்தில் அன்ரிசர்வ்டு பெட்டிகளுடன் இரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், முதல் கட்டமாக தெற்கு இரயில்வேயில் 23 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அன்ரிசர்வ்டு பெட்டிகளுடன் இயக்கப்பட இருப்பதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:-
பயணிகளின் நீண்ட கால கோரிக்கைக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் இரயில்களை நவம்பர் 1-ந் தேதி முதல் அன்ரிசர்டு பெட்டிகளுடன் இணைத்து இயக்க இரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
• ராமேசுவரம்-திருச்சி (வண்டி எண்:06850),
திருச்சி-ராமேசுவரம் (06849),
எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஜோலார்பேட்டை (06089),
ஜோலார்பேட்டை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (06090),
பாலக்காடு-திருச்சி (06844),
திருச்சி-பாலக்காடு (06843),
நாகர்கோவில்-கோட்டயம் (06366),
கோட்டயம்-நிலாம்பூர் சாலை (06326),
நிலாம்பூர் சாலை-கோட்டயம் (06325)
ஆகிய எக்ஸ்பிரஸ் இரயில்கள் அன்ரிசர்வ்டு பெட்டிகளுடன் இயக்கப்படும்.
• திருவனந்தபுரம்-சோரணூர் (06302),
சோரணூர்-திருவனந்தபுரம் (06301),
கண்ணூர்-ஆலப்புழா (06308),
ஆலப்புழா-கண்ணூர் (06307),
திருவனந்தபுரம்-திருச்சி (02628),
திருச்சி-திருவனந்தபுரம் (02627),
எர்ணாகுளம்-கண்ணூர் (06305),
கண்ணூர்-எர்ணாகுளம் (06306),
கண்ணூர்-கோவை (06607),
கோவை-கண்ணூர் (06608),
திருவனந்தபுரம்-குருவாயூர் (06342),
குருவாயூர்-திருவனந்தபுரம் (06341)
ஆகிய எக்ஸ்பிரஸ் இரயில்கள் நவம்பர்-1 தேதி முதல் அன்ரிசர்வ்டு பெட்டிகளுடன் இயக்கப்படும்.
* மங்களூரு-கோவை (06324),
கோவை-மங்களூரு (06323),
நாகர்கோவில்-கோவை (06321),
கோவை-நாகர்கோவில் (06322)
ஆகிய எக்ஸ்பிரஸ் இரயில்கள் நவம்பர்-10 முதல் அன்ரிசர்வ்டு பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போது முதல்கட்டமாக தெற்கு இரயில்வேயில் 23 எக்ஸ்பிரஸ் இரயில்களை அன்ரிசர்வ்டு பெட்டிகளுடன் இயக்க முடிவு செய்துள்ளோம். அதுபோல தெற்கு இரயில்வேயில் இயங்கும் அனைத்து இரயில்களையும் வழக்கமான ரெயில் சேவைகளாக இயக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். விரைவில் இது குறித்து முறையான அறிவிப்பினை வெளியிடுவோம்’ என கூறினார்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, தீபாவளி பண்டிகையொட்டி, சொந்த ஊருக்கு செல்லவிருக்கும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.